அட்லீயிடம் தெறி, மெர்சல் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டான். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கிறார்.
கல்லூரி பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள கதைக்களம் கொண்ட இந்தப்படத்தின் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சூரி இணைந்து நடித்துள்ளார்.
இந்த படம் வரும் மே 13ம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் சில காரணங்களால் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்படுமோ என்கிற பேச்சும் ஓடிகொண்டு இருந்தது.
இந்த நிலையில் மே-13ஆம் தேதி இந்தப்படம் வெளியாவதை உறுதி செய்யும் விதமாக தற்போது அந்த படத்தின் புரமோஷன் பணிகள் துவங்கியுள்ளன.
இதன் ஒரு பகுதியாகத்தான் டான் படத்தின் ரிலீஸ் போஸ்டர்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளனர்