எண்பதுகளின் இறுதியில் அதிரடியாக வில்லத்தனம் பண்ணிக்கொண்டு இருந்த மலேசியா வாசுதேவன், வினுச்சக்கரவர்த்தி இவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய வில்லனாக கமல் பிரபு இணைந்து நடித்த வெற்றிவிழா படத்தின் மூலம் அதிரடி என்ட்ரி கொடுத்தவர் வில்லன் நடிகர் சலீம் கவுஸ்.
அந்தப்படத்தில் அவரது வில்லத்தனமும் அவர் வசனம் பேசும் விதமும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது அவருக்காகவே கூட மீண்டும் ஒருமுறை படம் பார்க்க வந்தார்கள் என்று சொல்லலாம். அவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
சின்னகவுண்டர், தர்மசீலன், செந்தமிழ் பாட்டு, விஜயின் வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த சலீம் ஹவுஸ் தெலுங்கு மற்றும் இந்தியில் எல்லாம் சேர்த்து 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
சினிமாவில் எத்தனையோ வில்லன்கள் வந்திருந்தாலும் அதில் குறிப்பிடத்தக்க நபராக எப்போதுமே சலீம் கவுஸ் ரசிகர்களால் நினைவு கூறப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.