விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என நட்சத்திர கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்தப்படம் நாளைய தினம் வெளியாக இருக்கிறது இதையடுத்து நான்கு வருடங்களுக்கு பிறகு தனது படம் ரிலீஸ் ஆகிறது என்பதால், சற்றே படபடப்புடன் இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
தனது சோசியல் மீடியா பக்கத்தில் இது குறித்து கூறும்போது, “இந்த படம் நிச்சயமாக தியேட்டர்களில் வெளியாக வேண்டும் என விரும்பினேன்.. காரணம் இந்த படத்தில் ராம்போ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் பல்வேறுவிதமான திறமைகளை காண்பதற்காக மட்டுமே.
அது மட்டுமல்ல கண்மணி ஆக நடித்துள்ள என்னுடைய தங்கம் நயன்தாரா மற்றும் கதீஜா என்கிற கதாபாத்திரத்தில் மின்மினி போல நடித்துள்ள சமந்தா..
இவர்கள் மூவருக்குமே என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய வேலையை ரொம்பவே எளிமையாக்கியதற்காக உங்கள் அன்பை கேஆர்கே-க்கு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதுவரை கேஆர்கே என்றால் காத்துவாக்குல ரெண்டு காதல் என்பதன் சுருக்கமாகத்தான் சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இதை மூன்று கதாபாத்திரங்களின் பெயரான கண்மணி ராம்போ கதீஜா ஆகியோர்களின் முதல் எழுத்தாக குறிப்பிட்டுள்ளார்.