விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்திற்காக இணைந்துள்ளது இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் சிம்பு இருவரின் கூட்டணி.
சிம்புவை ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி புதிய ஆளாக மாற்றிக் காட்டியதில் கவுதம் மேனனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு அதேசமயம் இந்த வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவின் போஸ்டர்களை பார்க்கும்போது அவரை வேறு மாதிரி இந்த படத்தில் கவுதம் மேனன் காட்டப் போகிறார் என்பதும் நன்றாகவே தெரிகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி என்பவர் நடித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில் வரும் மே 6ஆம் தேதி இந்த படத்தில் முதல் சிங்கிளை வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.