பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி, நாகார்ஜூனா நடிக்கும் தோழா என்கிற படத்தை இயக்கியவர் தான்.

இப்படி ஒரு புதிய கூட்டணி அமைந்து இருப்பதன் மூலம் விஜய் ரசிகர்களுக்கு குறிப்பாக 2000-க்கு பிறகு விஜய் படங்களை பார்த்து ரசித்து வரும் ரசிகர்களுக்கு அவரது புதிய முகத்தை இந்த படத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது..

ரொம்பவும் குழம்ப வேண்டாம் இருபது வருடங்களுக்கு முன்பு காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய் போன்ற படங்களில் ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல், குடும்பம், சென்டிமென்ட், காதல் கலந்து நடித்திருப்பார் விஜய்.

ஆனால் இரண்டாயிரத்துக்கு பிறகு வெளியான படங்கள் அனைத்திலும் அவர் கமர்சியல் ஹீரோவாகவே நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தோழா படத்தை போல இந்த படமும் ரசிகர்களை உணர்வுபூர்வமாக கவரும் விதமாக இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி உருவாக்கி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. அதனால் விஜயின் ஆக்சன் காட்சிகளை இந்தப்படத்தில் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் சொல்கிறார்கள்.