இயக்குனர் செல்வராகவன் முதன்முறையாக ஒரு நடிகராக, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் சாணிக்காயிதம். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் 6ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இருவரையும் இந்த படத்திற்குள் அழைத்து வந்த அந்த அனுபவம் குறித்து கூறியுள்ளார் அருண் மாதேஸ்வரன்.

மகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்திவிட்டு சாணிக்காயிதம் கதையை உருவாக்கியதும் அதற்கு கீர்த்திசுரேஷ் தான் பொருத்தமாக இருப்பார் என அப்போதே முடிவு செய்தேன். காரணம் அவரை புதுமையான தோற்றத்தில் ரசிகர்கள் விரும்புவார்கள் என்றும் அந்த கதாபாத்திரத்திற்கு அவரும் சரியாக பொருந்துவார் என்றும் எனக்கு நம்பிக்கை இருந்தது. என்னுடைய முதல் தேர்வு, ஒரே தேர்வு அவராகத்தான் இருந்தார் அவரும் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஒப்புக்கொண்டார்.

அதேபோல ஒரு இயக்குனராக செல்வராகவனை நடிகராக மாற்றி நடிக்க வைக்கும்போது இந்த படத்தில் அவர் எனக்கு அட்வைஸ் தருவாரா, அதனால் எங்கள் இருவரது பார்வைகள் வேறுபாட்டின் காரணமாக படைப்பு வேறுபாடுகள் இருக்குமா என்றெல்லாம் யோசித்தேன்.

ஆனால் அவரோ தன்னை நடிகராகவும் என்னை இயக்குனராகவும் மட்டுமே நினைத்துக்கொண்டு என்மீது முழுமையான நம்பிக்கை வைத்து எனது தேவையற்ற சந்தேகங்களை பொய்யாக்கி விட்டார் என்று கூறியுள்ளார் அருண் மாதேஸ்வரன்