கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் சுயசரிதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருந்தது. உணர்வுபூர்வமான அதேசமயம் கமர்சியல் அம்சங்கள் அனைத்தும் நிறைந்ததாக இந்த படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் சுதா கொங்கரா.
இந்தநிலையில் இந்த படம் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை ரொம்பவே கவர்ந்துவிட்டது. ஏற்கனவே சூர்யா இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து தயாரிக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது எல்லாம் சேர்ந்து கை கூடி வந்துள்ளது.
சமீபத்தில் மும்பை சென்ற சூர்யா அக்ஷய்குமார் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் இந்த படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிப்பதற்காக பூஜை போட்டு விட்டு வந்துள்ளார். அக்ஷய் குமார் ஜோடியாக நடிகை ராதிகா மதன் நடிக்கிறார்.
பிரபல பாலிவுட் நிறுவனமான அபுடான்டியா என்டர்டைன்மென்ட் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்களுடன் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்தப்படத்தை தயாரிக்கிறது.