தெலுங்கில் முன்னணி நடிகராக குறுகிய காலத்திலேயே வளர்ந்துவிட்ட நடிகர் விஜய் தேவரகொண்டா அடுத்ததாக சமந்தாவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை சிவா நிர்வனா என்பவர் இயக்க மகாநடி படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா முன் சமந்தாவும் இணைந்து நடிக்கும் படம் இது.
இந்த படத்திற்கு ஹேசம் அப்துல் வஹாப் என்கிற புதிய இசையமைப்பாளர் தான் இசையமைக்க இருக்கிறார். தெலுங்கில் மரகதமணி, தேவிஸ்ரீபிரசாத், தமன் என முன்னணி இசையமைப்பாளர்கள் இருக்கும் சூழ்நிலையில் இப்படி ஒரு பெரிய படத்திற்கு இதுபோன்ற புதிய இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்து இருப்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடமே பாராட்டுப் பெற்றவர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் மகன் பிரணவ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ஹிருதயம் என்கிற படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர்.
பல இடங்களில் இந்தப் பாடல் ஒலிப்பதை அதை நானே கேட்டுள்ளேன் என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஒரு சந்திப்பின்போது இவரை பாராட்டியுள்ளார்.
அதனால்தான் ஒரு படத்திற்கு இசையமைத்த நிலையிலேயே இவருக்கு விஜய் தேவரகொண்டா படத்தில் இசையமைக்கவும் அதன்மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.