V4UMEDIA
HomeNewsKollywoodரமலான் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக முதல்வர்

ரமலான் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக முதல்வர்

தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்ற கழகமும் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அவரது மகனும் தற்போதைய முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களும் எப்போதுமே சிறுபான்மை மக்களின் பாதுகாவலராகவே இருந்து வருகிறார்கள் அந்த வகையில் சிறுபான்மை மக்களின் விழாக்களில் தவறாமல் கலந்து கொண்டு தனது பங்களிப்பை அளித்து வருகிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்

இந்தநிலையில் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவின் சார்பில் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான் அவர்களின் தலைமையில், சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர்கள் அடையார் ஷபீல் மற்றும் இதர துணை செயலாளர்கள் முன்னிலையில் இஸ்லாமியப் பெருமக்களின் இனிய ரமலான் இப்தார் நிகழ்வில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாரிய தலைவர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் அரசியல்  சமுதாய பிரமுகர்கள் உலமா பெருமக்கள் மார்க்க அறிஞர்கள் நீதியரசர்கள் கல்வியாளர்கள் ஆகியோர்கள் பங்கேற்றனர்.

மேலும் நாசர், பூச்சி முருகன் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்களும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், கழக முன்னணி நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Most Popular

Recent Comments