சுந்தர்.சியை பொறுத்தவரை தன இயக்கம் படங்கள் கலகலவென காமெடியாக இருக்கும்படியாக பார்த்துக்கொண்டாலும் தான் நடிக்கும் படங்களை அந்தந்த இயக்குனர்களின் விருப்பப்படி விட்டு விடுவார். அப்படி அவர் நடித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படம் சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது
சைக்கோ த்ரில்லர் படங்களுக்கென ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.. காரணம் படம் முழுவதும் நாயகனுக்கும் வில்லனுக்கும் நடக்கும் நீயா நானா என்கிற கண்ணாமூச்சி ஆட்டம் படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கை நுனியிலேயே அமர வைத்திருக்கும்.
அவனி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்.சி, ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படம் அப்படி ஒரு அனுபவத்தை ரசிகர்களுக்கு நூறு சதவீதம் தரும் விதமாக உருவாகியுள்ளது.
அடுத்தடுத்து வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர், ஜெய், சுந்தர்சி இருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் இவற்றுடன் தற்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தின் டீசரும் அதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இதற்குமுன் வெளியான சைக்கோ த்ரில்லர் படங்களில் இருந்து நிச்சயம் மாறுபட்ட படமாகவும் இது இருக்கும் என்றும் தெரிகிறது.
1980களில் நடக்கும் இந்த சைக்கோ திரில்லர் கதையில் சுந்தர்.சி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, முதன்முறையாக சைக்கோ வில்லனாக ஜெய் நடித்துள்ளார். எட்டு வருட இடைவெளிக்கு பிறகு இந்தப்படத்தில் நாயகியாக நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் மறு பிரவேசம் செய்துள்ளார். நடிகை ஹனி ரோஸ் தற்போது வெளியாகியுள்ள டீசரும் இந்த மூன்று கதாபாத்திரங்களை மையப்படுத்தியே உருவாகியுள்ளது.
இவர்களுடன் இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் பத்ரி. கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை பென்னி ஆலிவர் மேற்கொள்கிறார்.