கடந்த 40 வருடங்களில் சினிமா துறையிலும் இருபது வருடங்களாக சின்னத்திரையிலும் நடிகை ராதிகாவின் பங்களிப்பு மிகவும் அபரிமிதமானது. தமிழ் சினிமாவில் இதுபோன்ற சாதனைகளை செய்தது வெகுசிலரே. அப்படிப்பட்டவருக்கு லண்டனில் மிகப்பெரிய கௌரவம் சமீபத்தில் அளிக்கப்பட்டது.

தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து பார்லிமென்ட் உறுப்பினர் மரியா மில்லர் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளார். அந்த விழாவில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.
ராதிகாவுக்கு லண்டன் பார்லிமென்ட்டில் நடந்த விழாவில் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதை பெறுவதற்காக ராதிகா லண்டன் சென்று இருந்தார்

இதைத்தொடர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் ராதிகா.

மேலும் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கம் செய்வதற்குத் 10 மில்லியன் பிரிட்டானிய பவுண்டுகள் தேவைப்படும் நிலையில் தனது பங்களிப்பாக ஒரு லட்சம் ரூபாயை (ஆயிரம் பவுண்டுகள்) நன்கொடையாக வழங்கினார்.
