மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்யும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் கூகுள் குட்டப்பா.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற படம்தான் தமிழில் கூகுள் குட்டாப்பாவாக ரீமேக் ஆகியுள்ளது.
இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். படத்தில் ஒரு ரோபோவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது..
கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இரட்டை இயக்குனர்களான சபரி சரவணன் என்பவர்கள் இந்த படத்தை இயக்கி உள்ளனர். வரும் மே 6ஆம் தேதி இந்தப் படம் ரிலீசாக இருக்கிறது.
வயதான காலத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் மகன் தனது தந்தையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு ரோபோவை பணிக்கு நியமிக்கிறார். ரோபோவுக்கும் தந்தைக்கும் இடையே ஏற்படும் பாச பிணைப்பையும் மற்றும் அதை ஒட்டி ஏற்படும் பிரச்சனையையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.