விஜய் ஆண்டனி படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என ரசிகர்கள் ஏங்கும் விதமாக பிச்சைக்காரன் போன்ற படங்களை கொடுத்தவர் தான் அவர். ஆனால் தற்போது அதிக படங்களில் நடித்து வருபவரும் அவரே.
அவரது நடிப்பில் தமிழரசன், கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் என படங்கள் வரிசை கட்டி தயாராகி வருகின்றன. இதில் எந்த படம் முதலில் வரும் என்பது விஜய் ஆண்டனிக்கு கூட தெரியாத ரகசியம்.
இந்த நிலையில் சிவாவை வைத்து தமிழ் படம் மற்றும் தமிழ் படம்-2 என இரண்டு பாகங்களையும் இயக்கிய சி.எஸ்.அமுதன் அடுத்தததாக விஜய் ஆண்டனியை வைத்து ரத்தம் என்கிற படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கண்ணன் என்பவர் இசையமைக்கும் இந்தப்படத்தில் தெருக்குரல் அறிவு “ரத்தம்” திரைப்படத்தில் ஒரு தீம் பாடலை எழுதியதோடு, பாடலை பாடியும் உள்ளார்

இந்த நிலையில் இன்றுமுதல் இந்த படத்திற்கு டப்பிங் பேச துவங்கியுள்ளார் விஜய் ஆண்டனி.

இதற்கு முந்தைய இரண்டு படங்களையும் காமெடி நையாண்டி கலந்து எடுத்திருந்த சி.எஸ்.அமுதன் இந்த படத்தை ஆக்சன் கலந்த கமர்சியல் படமாக எடுத்துள்ளார் இந்த படத்திற்கு திலீப் சுப்பராயன் மாஸ்டர் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார் என்பதால் ஒரு அதிரடியான படத்தை இந்த கூட்டணி இடம் எதிர்பார்க்கலாம்.