V4UMEDIA
HomeNewsKollywoodஆஹா வடிவில் ஐங்கரனுக்கு விடிவுகாலம் பிறந்தது

ஆஹா வடிவில் ஐங்கரனுக்கு விடிவுகாலம் பிறந்தது

ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் வழக்கமான படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி இருக்கும் இப்படம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு படப்பிடிப்பும் எப்போதோ முடிவடைந்து விட்டது.

ஜி.வி.பிரகாஷின் முந்திய படமான செல்பி படத்தை போல இந்தப்படமும் கல்லூரி பின்னணியில் தான் உருவாகியுள்ளது. இந்தநிலையில் இந்தப்படம் ஆஹா ஒடிடி தளத்தில் மே-5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் கலந்துகொண்ட ஜிவி பிரகாஷ் குமாரும் ஐங்கரன் படத்தின் தயாரிப்பாளர் கணேஷும் அந்த விழா மேடையிலேயே ஐங்கரன் பட ரிலீஸ் தகவலை வெளியிட்டனர்.

Most Popular

Recent Comments