பழங்காலத்தில் நாடகங்கள் போடப்படும்போது ராஜா வேஷம் போடுபவரை ராஜபார்ட் என்றும் திருடன் வேஷம் போடுபவரை கள்ளபார்ட் என்றும் குறிப்பிடுவது வழக்கம். அப்படி கள்ளபார்ட் என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜபாண்டி, இவர் ஏற்கனவே என்னமோ நடக்குது, அச்சமின்றி ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்த படத்தில் அரவிந்த்சாமி, ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுமே கிட்டத்தட்ட கள்ளபார்ட் தான் என்று கூறி ஷாக் கொடுக்கிறார் இயக்குனர் ராஜபாண்டி.
இந்த படத்திற்காக பல லட்சம் செலவில் 4 செட்டுகள் அமைக்கப்பட்டு ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம்.
திருடர்கள் பற்றிய கதைதான் என்றாலும், உணர்வுபூர்வமான போராட்டமாக இந்தப்படம் இருக்கும் என்றும் இதுவரை யாரும் தொடாத கதை என்றும் கூறுகிறார் இயக்குனர் ராஜபாண்டி..
திடீரென இந்த படத்தை பற்றிய பேச்சு வருவதற்கு காரணம் இருக்கிறது, மூன்று வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்தப் படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது..