V4UMEDIA
HomeNewsKollywoodகொஞ்ச நாள் விலகி நிற்கிறேன் ; விஷ்ணு விஷால் எடுத்த அதிரடி முடிவு

கொஞ்ச நாள் விலகி நிற்கிறேன் ; விஷ்ணு விஷால் எடுத்த அதிரடி முடிவு

இன்றைய சூழலில் அரசியல்வாதி ஆனாலும் சினிமா நட்சத்திரங்கள் ஆனாலும், ஏன் சாதாரண பொதுஜனம் என்றாலும் கூட தங்களது சொந்த விஷயங்களை அல்லது விருப்பு, வெறுப்புகளையும் வெளிப்படுத்துவதற்கு முக்கியமான பாலமாக இருப்பது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாக்கள் தான். நடிகர் விஷ்ணு விஷாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது படங்களை பற்றியும் தன்னைப்பற்றி வெளியாகும் சில செய்திகளுக்கான விளக்கங்களையும் கொடுத்து ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து வந்தார்.

ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தற்போது சில காலத்திற்கு சோசியல் மீடியாவில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் விஷ்ணுவிஷால்.

ராட்சசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷாலுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் வெளியான எப்.ஐ.ஆர், இனி அடுத்ததாக வெளியாக இருக்கும் மோகன்தாஸ் ஆகிய படங்கள் குறித்தும், தற்போது தெலுங்கில் நடித்து வரும் புதிய படம் இவற்றையெல்லாம் பற்றி அவ்வப்போது அப்டேட் தகவல் கொடுத்து வந்த விஷ்ணு விஷால், இப்படி திடீரென சோசியல் மீடியாவில் இருந்து விலகியதற்கு வாழ்க்கையில் கொஞ்ச நாட்கள் ஓய்வு எடுப்பது அவசியம் என்று ஒரு காரணத்தையும் கூறியுள்ளார். அதையே நாமும் நம்புவோம்.

Most Popular

Recent Comments