கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி மகாநடி என்கிற திரைப்படம் வெளியானது. கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். அந்த படத்தில் அவருக்கு துல்கர் சல்மான் ஜோடியாக நடித்திருந்தார்.
இவர்கள் தவிர அந்த படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், அவருக்கு ஜோடியாக சமந்தாவும் நடித்திருந்தனர். ஆனால் அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் ஆகியோர் மீதே ரசிகர்களின் கவனம் எல்லாம் இருந்ததால், விஜய் தேவரகொண்டா, சமந்தா ஜோடி பெரிய அளவில் கவனம் பெறவில்லை.

இந்த நிலையில் இந்த ஜோடி தெலுங்கில் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றது. தெலுங்கில் பிரபல நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளனர்.

இந்த படத்தின் துவக்க விழா பூஜை இன்று நடைபெற்றது. மஜிலி என்கிற ஹிட் படத்தை இயக்கிய சிவா நிர்வணா என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.
