தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஆக்சன் ஹீரோவாக கலக்கியவர் நடிகர் அருண்பாண்டியன். அதன்பிறகு கடந்த பத்து வருடங்களுக்கு முன் மிகப்பெரிய தயாரிப்பாளராகவும் மாறி முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வந்தார். அவரது மகள் கீர்த்தி பாண்டியன் தும்பா என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அந்த படத்தை விட அதற்கு அடுத்ததாக தனது தந்தை அருண்பாண்டியன் உடன் இணைந்து, தந்தை மகள் கதையில் அவர் நடித்த அன்பிற்கினியாள் என்கிற படம் அவரது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியது.
இதை தொடர்ந்து கண்ணகி என்கிற படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார் கீர்த்தி பாண்டியன்.
அடுத்ததாக கொஞ்சம் பேசினால் என்ன என்கிற படத்தில் நடிக்கிறார் கீர்த்தி பாண்டியன். இந்த படத்தில் கதாநாயகனாக வினோத் கிஷன் நடிக்கிறார்.
படத்தை கிரி மர்பி என்பவர் இயக்குகிறார். எண்பதுகளில் தனது இனிய குரலால் பாடல்கள் மற்றும் இசையால் ரசிகர்களை ஈர்த்த தீபன் சக்கரவர்த்தி நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் இசையமைக்கிறார்.