தமிழ் சினிமாவில் வெகு சிலரே\ இயக்குனர், நடிகர் என இரட்டை குதிரை சவாரியை அழகாக செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. தற்போது ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அதேசமயம் பட்டாம்பூச்சி உள்ளிட்ட சில படங்களிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார் சுந்தர்சி.
இந்த பட்டாம்பூச்சி படத்தில் கொடூரமான சைக்கோ வில்லனாக நடித்துள்ளார் நடிகர் ஜெய். சமீபத்தில்கூட இந்த படத்தின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி அதிர்வை ஏற்படுத்தின.
அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கத் துடிக்கும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் சுந்தர்.சி நடித்துள்ளார்.
ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி.
வழக்கமான தமிழ் படங்கள் போல அல்லாமல் முதல் காட்சியிலேயே விறுவிறுப்பாக துவங்கும் இந்த படத்தின் கதை இறுதிக்காட்சி வரை ரசிகர்களை சீட் நுனியில் அமர வைக்கும் திரில்லராக உருவாகி உள்ளது.
இந்தப்படம் மே மாதம் தான் வெளியாகிறது என்றாலும் படம் குறித்து அவ்வப்போது வெளியாகும் தகவல்களும் படத்தின் போஸ்டர்களும் இந்த படத்தின் மீது இப்போதிருந்தே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன.
இந்த படத்தில் ஜெய் வில்லனாக நடித்தாலும் கூட படத்தில் வரும் ஜெயில் காட்சியில் ஒரு கானா பாடலுக்கு அவரே இசை அமைத்துள்ளார் என்பது ஆச்சரியமான ஒரு தகவல்.
அது மட்டுமல்ல அந்த பாடலை கானா பாடலுக்கு புகழ்பெற்ற இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு ஜெயில் குத்து பாடல் என பெயர் வைத்துள்ளனர்.