குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பது போல இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் பரத். அதைத்தொடர்ந்து காதல், வெயில், எம் மகன் என பல ஹிட் படங்களை கொடுத்தவர், இடையில் சில நாட்கள் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார் என்றே சொல்லவேண்டும்.
இதை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக மீண்டும் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான காளிதாஸ் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது பரத்தின் 50-வது படம் தற்போது உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கு லவ் என டைட்டில் வைத்துள்ளனர். வாணி போஜன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தை பிரபல வசனகர்த்தா ஆர்.பி பாலா இயக்குகிறார் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ளார்.

மோகன்லால் நடித்து தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் படங்களுக்கு ஆர்பி பாலா தான் வசனம் எழுதி வெளியிட்டு வருகிறார். அந்த நட்பின் அடிப்படையில் இந்தப்படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார் மோகன்லால்.