மேயாத மான், மெர்குரி, பில்லாபாண்டி, பூமராங் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை இந்துஜா. சில படங்களில் கதாநாயகியாகவும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துவரும் நானே வருவேன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்

சமீபத்தில் இந்தப்படத்தின் இயக்குனர் செல்வராகவன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இந்த அற்புதமான வாய்ப்பையும் அனுபவத்தையும் வழ்னகியதர்காக நன்றி தெரிவித்திருந்தார் இந்துஜா.

இது படத்தில் வேறெந்த முன்னணி கதாநாயகிகள் நடிக்கிறார்கள் என தெரியாத நிலையில் இந்துஜா மட்டுமே நடித்துள்ளார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

அதனால் இந்த படத்தை தனது கேரியரில் ஒரு திருப்பு முனை ஏற்படுத்தும் படமாக இந்துஜா மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கிறார் என்று சொல்லப்படுகிறது..