V4UMEDIA
HomeNewsKollywoodஹாஸ்டல் படத்தில் நகைச்சுவையை சீரியஸ் பிசினஸ் செய்துள்ளோம் ; அசோக் செல்வன்

ஹாஸ்டல் படத்தில் நகைச்சுவையை சீரியஸ் பிசினஸ் செய்துள்ளோம் ; அசோக் செல்வன்

அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில், ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்’. தயாரிப்பாளர் ஆர்..ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், தயாராகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து ரவிமரியா, சதீஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நடிகர் ரவி மரியா  பேசும்போது, “மூன்று வருடம் ஹாஸ்டலில் தங்கி படித்த அனுபவங்களை எல்லாம் கொட்டி தீர்த்து விடலாம் என போனால் இந்தப்படத்தில் பிரியா பவானி சங்கருக்கு அப்பா என்று சொல்லிவிட்டார்கள். சரி, பிரியாவுடன் நடிக்கலாம் என ஓகே சொல்லிவிட்டேன்” என்று, தான் பிரியா பவானி சங்கரின் ரசிகன் என்பதை சொல்லி பெருமைப்பட்டுகொண்டார்.

நடிகர் அசோக் செல்வன் கூறியதாவது, “ஆரம்பத்தில், இந்த திரைப்படத்தில் நடிக்க எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் சுமந்த் படத்தின் சாராம்சத்தை மட்டும் எடுத்துவிட்டு ஸ்கிரிப்டை முழுவதுமாக மாற்றியிருந்தார்.

ரவி மரியா சார் சொன்னது போல, நகைச்சுவை ஒரு சீரியஸ் பிசினஸ். நாங்கள் அதை முழு மனதுடன் செய்ய முயற்சித்தோம். அவர் கூறியது போல், அனைவரும் அனுபவித்து பாராட்டுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்..

Most Popular

Recent Comments