V4UMEDIA
HomeNewsKollywoodவடிவேலுவை ஆட்டிவைக்கும் பிரபுதேவா

வடிவேலுவை ஆட்டிவைக்கும் பிரபுதேவா

பிரபுதேவா கதாநாயகனாக அறிமுகமான அதே காலகட்டத்தில் நகைச்சுவை நடிகராக வளர்ந்து வந்தவர் தான் வைகைப்புயல் வடிவேலு. இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் காதலன் படத்தில் தொடங்கி, ராசய்யா, மனதை திருடிவிட்டாய் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து காமெடியில் கலக்கினார்கள்.

அதன்பிறகு பிரபுதேவா இயக்குனராக மாறிய பின் தனது படங்களில் வடிவேலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகைச்சுவைக் காட்சிகளை அமைத்து வந்தார். கிட்டதட்ட இவர்களது நட்பு 3௦ வருடத்தை தாண்டி உள்ளது.

இந்த நிலையில் வடிவேலு, பிரபுதேவா இணைந்து நடித்த மனதை திருடிவிட்டாய் படத்தில் பிரசித்தி பெற்ற காமெடி பாடலான சிங் இந்த ரெயின் என்கிற பாடலை பாடியபடி அருகில் நிற்கும் பிரபுதேவாவை வடிவேலு கட்டிப்பிடிக்கும் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திடீரென இவர்கள் சந்திப்பு எதற்காக என விசாரித்ததில் தற்போது சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்கிற படத்தில் நடித்து வருகிறார் இல்லையா.. அந்த படத்தில் ஒரு ஸ்டைலான மாஸான ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்து வருகிறார்.

இந்த வயதிலும் வடிவேலுவை பிரபுதேவா துள்ளலாக ஆடவைத்து உள்ளதாக சொல்லப்படுகிறது இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து தான் இந்த வீடியோவை எடுக்கப்பட்டு அதை பிரபுதேவா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Most Popular

Recent Comments