கடந்த இரண்டு வருடங்களில் ஹன்சிகாவின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றதும், இனி தமிழ் சினிமாவில் அவரைப் பார்க்க முடியாதா என்பது போல ஒரு தோற்றம் உருவானது உண்மை தான்.. ஆனால் தற்சமயம் அதிக படங்களில் நடித்து வருபவரும் ஹன்சிகா தான் என்பது மறுக்க முடியாத உண்மை. அதேசமயம் இன்னொரு பக்கம் மை-3 என்கிற வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார் ஹன்சிகா.
கலகலப்பான காமெடி படங்களை இயக்குவதற்கு பெயர்போன இயக்குனர் எம்.ராஜேஷ் முதன்முறையாக இயக்கியுள்ள வெப் சீரிஸ் இது.. இந்த வெப்சீரிஸில் ஹன்சிகாவுடன் ஜனனி அய்யர் மற்றும் ஆஷ்னா சவேரி என இன்னும் இரண்டு கதாநாயகிகள் இணைந்து நடிக்கின்றனர். கதாநாயகர்களாக சாந்தனு, பிக்பாஸ் முகேன் ராவ் ஆகியோர் நடிக்கின்றனர்.
சென்னையில் இந்த வெப்சீரிஸின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்த மகிழ்ச்சியை படக்குழுவினருக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார் ஹன்சிகா.
இந்த வெப்சீரீஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி இத்தளத்தில் வெளியாக இருக்கிறது.