நடிகர் விக்ரமின் கைவசம் தற்போது மூன்று படங்கள் முடிந்த நிலையில் இருக்கின்றன. அஜய் ஞானமுத்து டைரக்ஷனில் கோப்ரா, கௌதம் மேனன் டைரக்ஷனில் துருவ நட்சத்திரம் மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் என மூன்றுமே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்தான்.
இதில் கோப்ரா படம் முதலில் வெளியாகும் என தெரிகிறது. கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார்.
மற்றும் கே எஸ் ரவிக்குமார் ரோஷன் மேத்யூ என முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்
இந்த படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு போஸ்டர்களும் புகைப்படங்களும் நிச்சயமாக இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் ஆன அதிரா என்கிற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.