சின்ன கலைவாணர் என ரசிகர்கள் மனதில் இடம் பெற்றிருந்த நடிகர் விவேக் இந்த உலகை விட்டுப் பிரிந்து ஒரு வருடம் ஓடிவிட்டது. ஒரு கலைஞனாக மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த விவேக், இன்னொரு பக்கம் இந்த சமூகத்திற்கு பயன் தரும் விதமாக இந்த பூமியை காக்கும் விதமாக, ஒரு கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்கிற லட்சியத்தை இலக்காகக் கொண்டு, மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் காட்டிய வழியில் மரக்கன்றுகளை நட்டு வந்தார். கிட்டத்தட்ட பல லட்சம் மரக்கன்றுகளை அவர் நட்டிருந்த நிலையில்தான் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்.

இந்த நிலையில் 26 வருடங்கள் அவருடன் கூடவே பயணித்த நடிகர் செல் முருகன், விவேக்கின் இந்த கனவை மீண்டும் விட்ட இடத்தில் இருந்து துவங்குவதற்கான முன்னெடுப்பை ஆரம்பித்துள்ளார்.

சென்னையில் இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரியான அரவிந்தன் ஐபிஎஸ், நடிகர்கள் பாபி சிம்ஹா, பூச்சி முருகன், உதயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
