V4UMEDIA
HomeNewsKollywoodதாய்மாமா ஆனதை தங்க காசு கொடுத்து கொண்டாடிய விஷால்

தாய்மாமா ஆனதை தங்க காசு கொடுத்து கொண்டாடிய விஷால்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இப்போதும் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர்கள் ஆக இருப்பவர்கள் சிம்புவும் விஷாலும் தான். அதே சமயம் இவர்கள் இருவரும் தங்களது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தாலும்கூட தங்களது தங்கை, தம்பி திருமணங்களை சரியான நேரத்தில் நடத்தி கடமையை நிறைவேற்றி விட்டனர்.

அந்த வகையில் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா இரண்டு தினங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். இந்த தகவலை முதல் ஆளாக சந்தோஷத்துடன் அறிவித்திருந்தார் தாய்மாமன் விஷால். இந்த நிலையில் தனது தந்தை மூலமாக இன்னொரு அருமையான காரியத்தையும் செய்துள்ளார் விஷால்.

அதாவது தனது தங்கைக்கு இளவரசி பிறந்து உள்ளார் என்பதை கொண்டாடும் விதமாக சென்னை கஸ்தூரிபாய் தாய்சேய் நல மருத்துவமனை மற்றும் கோடம்பாக்கம் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவற்றில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் விஷால்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஹைதராபாத்தில் உள்ள நிலோபர் அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் தங்க நாணயம் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி அவர்களால் வழங்கப்பட்டது.

Most Popular

Recent Comments