பொதுவாகவே இந்தியாவில் வெளியாகும் படங்கள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் முதல் நாலே பிரீமியர் காட்சி என்கிற பெயரில் வெளியாகி வருவது வழக்கம். இந்த பிரீமியர் காட்சியில் படம் பார்ப்பதற்காக வெளிநாட்டு ரசிகர்கள், குறிப்பாக அமெரிக்காவில் கூட்டம் அலைமோதும்.
அந்த வகையில் இந்த பிரீமியர் காட்சிகளின் மூலம் கிடைக்கும் வசூல் அடிப்படையில் இப்போது வரை முதலிடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
முதலிடத்தில் கபாலி திரைப்படம் 19 லட்சம் அமெரிக்க டாலர்களையும் பீஸ்ட் திரைப்படம் அதற்கு அடுத்ததாக 5 லட்சம் டாலர்களை வசூலித்து இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
அதற்கடுத்த இடங்களில் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட காலா, அண்ணாத்த ஆகிய படங்களும் மற்றும் ஒன்பது பத்தாவது இடங்களில் விஜய்யின் மெர்சல் சர்க்கார் ஆகிய படங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன.
வேறு எந்த நடிகரின் படங்களும் இந்த பத்து இடங்களில் ஒன்றை கூட பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.