கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய கொரோனா தாக்கம் பொதுமக்களை மட்டுமல்ல தமிழ் சினிமாவையும் ஆட்டிப்படைத்து விட்டது என்றே சொல்லலாம். இந்த சமயத்தில் வெளியிடுவதற்கு தயாராக இருந்த பல படங்களை ஒடிடி நிறுவனங்களில் வெளியிட்டதன் மூலம் பல தயாரிப்பாளர்கள் தங்களது முதலீட்டை சிந்தாமல் சிதறாமல் திரும்பப் பெறமுடிந்தது.
அந்தவகையில் டிஸ்னி ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், சோனி லைவ் போன்ற சர்வதேச ஒடிடி தளங்கள் தமிழ் படங்களை வெளியிட்டு வந்தன. இந்த நிலையில் தமிழுக்கு என்றே ஆஹா என்கிற ஓட்டிட்டு தளத்தை துவங்கியுள்ளார் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த்.
இதற்கான துவக்கவிழா நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆஹா ஒடிடி தளத்தின் பிராண்ட் தூதர்களாக சிம்புவும் அனிருத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப்பாளிகளைக் கொண்டு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட எங்கள் தமிழ் உள்ளடக்கத்தை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறினார்