பாலிவுட் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப். கடந்த மூன்று வருடங்களுக்கு முன் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்..
அதுமட்டுமல்ல, இவர் எப்போதுமே தென்னிந்திய மொழிப்படங்களின் மீது தனது கவனத்தை பதித்து இருப்பவர்.. குறிப்பாக தமிழ் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் ரொம்பவே நட்பு கொண்டவர்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ரஞ்சித் தயாரிப்பில் அவரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜேக்கப் பிராங்கிளின் என்பவர் இயக்கத்தில் வெளியான ரைட்டர் படத்தை சென்னை வந்து பார்த்து உள்ளார் இயக்குனர் அனுராக் காஷ்யப்.

சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் விமர்சகர்களின் மற்றும் பத்திரிக்கையாளர்களின் பாராட்டை பெற்றது. அதுமட்டுமல்ல பல சினிமா பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து விட்டு தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்

இந்த நிலையில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்தப் படத்தை பார்த்து விட்டு இயக்குனர் பா.ரஞ்சித், இயக்குனர் ஜேக்கப் பிராங்கிளின் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.