Home News Kollywood அபர்ணா தாஸுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு வழங்கிய விஜய்

அபர்ணா தாஸுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு வழங்கிய விஜய்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் முக்கிய வேடத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் கீபோர்ட் வாசிப்பது போலவும் விஜய் பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் அதை ஆச்சரியமாக பார்ப்பது போலவும் ஒரு புகைப்படம் வெளியானது. இதன் மூலம் ஓவர்நைட்டில் புகழ் வெளிச்சம் பெற்றார் அபர்ணா தாஸ்.

இந்த நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அபர்ணா தாஸ். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் அவரும், கதாநாயகி பூஜா ஹெக்டே, படத்தின் இயக்குனர் நெல்சன், டான்ஸ் மாஸ்டர் சதீஷும் ஒன்றாக பயணிக்க, அந்த காரை ஒரு எளிமையான டிரைவராக விஜய் ஓட்டுவது போன்று அந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

விஜய் அமைதியாக கார் ஓட்டிக் கொண்டிருக்க மற்றவர்கள் ஜாலியாக அரட்டை அடித்து வருகின்றனர். இதைவிட வளரும் நடிகையான அபர்ணா தாஸுக்கு மிகச்சிறப்பான ஒரு பிறந்த நாள் பரிசு கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை.

இந்த வீடியோ மூலம் மீண்டுமொருமுறை விஜய்யின் எளிமையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது