V4UMEDIA
HomeNewsKollywoodதமிழ் எங்கள் உயிர் என்று கூறுபவர்களுக்கு தங்கர்பச்சானின் சாட்டையடி கேள்விகள்

தமிழ் எங்கள் உயிர் என்று கூறுபவர்களுக்கு தங்கர்பச்சானின் சாட்டையடி கேள்விகள்

கடந்த சில நாட்களாக மிகப்பெரிய விவாதம் ஒன்று சோசியல் மீடியாவிலும் பொதுவெளியிலும் கூட ஓடிக்கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சர் ஒருவர் இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை ஏற்போம் என்று கூற தமிழகத்தில் இருந்து அதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தமிழின் பெருமைகளை பற்றி கூறி வருகின்றனர். அதேசமயம் எப்போதுமே தமிழ் மொழியிலேயே தன்னுடைய உரையாடல்களை மேற்கொண்டு வரும் இயக்குனர் தங்கர்பச்சான் தமிழ் மீது பற்று கொண்ட பலரையும் சிந்திக்க வைக்கும் சில சாட்டையடி கேள்விகளை வீசியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தி வேண்டாம் என்று சோசியல் மீடியாவில் மட்டும்தான் நாம் குரல் கொடுக்கிறோம்.. ஆனால் தமிழில் கல்வி வேண்டாம்.. திருமண அழைப்பிதழில் தமிழ் வேண்டாம்.. நாளேடுகளில் தமிழ் வேண்டாம்.. பொது இடங்களில் தமிழ் வேண்டாம் என தமிழை உதாசீனப்படுத்துகிறோம்.. ஆனால் தமிழ் தான் எங்கள் உயிர் எனக் கூறிக் கொள்கிறோம்

இன்று குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் பேசும் பேச்சுக்களில் ஒரு வார்த்தை தமிழ் என்றால் அடுத்த வார்த்தை ஆங்கிலம் என்று மாறிவிட்டது. தூய தமிழில் யாராவது பேசினால் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்களை பார்ப்பது போல தான் பார்க்கிறோம்.

3 லட்சம் அளவில் சொற்களைக் கொண்ட தமிழ் களஞ்சியத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 சொற்களைக் கூட பேசத்தெரியாத ஒரு இனமாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம். கல்வி பயிலாத ஏழைமக்கள் இடத்தில்தான் கொஞ்சமேனும் தமிழ் மொழி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதுவும் இந்த தலைமுறையுடன் அழிந்து போகும்.. தமிழ் வளர்கிறதா ? வாழ்கிறதா கொல்லப்படுகிறதா! தமிழர்களாகிய நாம் தான் சிந்திக்க வேண்டும்

Most Popular

Recent Comments