சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தற்போது தான் பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி முடித்துள்ளார்.

இந்தநிலையில் தற்போது சிம்பு ஆட்டோகாரன் கெட்டப்பில் இருக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் காக்கி உடையணிந்து உள்ள சிம்பு ஆட்டோ ஒன்றில் ஏறி அமர்கிறார்.

இந்த வீடியோவை வெளியிட்டு இது சிம்புவின் புதிய லுக் என்றும் விரைவில் மிகப்பெரிய அறிவிப்பு வரப்போகிறது என்றும் இது சிம்புவின் புதிய அவதாரமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு எப்படி, எப்போது வரப்போகிறது என்று பார்க்கலாம்.