தமிழில் அருள்நிதி நடித்த உதயன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரணீதா சுபாஷ். அதன்பிறகு சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட சில தமிழ்ப்படங்களிலும் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார்.

கடந்த வருடம் மே மாதம் திடீரென பெங்களூருவை சேர்ந்த நிதின் ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் பிரணீதா சுபாஷ்.

திருமணம் ஆகி ஒரு வருடம் நெருங்கும் நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சிம்பாலிக்காக அறிவித்துள்ளார் பிரணீதா. குறிப்பாக அவரது கணவரின் பிறந்தநாளன்று இந்த மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார் பிரணீதா.

தனது கணவரை கட்டிப்பிடித்தபடி மருத்துவமனையின் ஸ்கேன் ரிப்போர்ட்டையும் கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவியையும் கையில் பிடித்து காட்டியபடி சில புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் பிரணீதா சுபாஷ்.
