இயக்குனர் எம்.ராஜேஷ் கலகலப்பான, ஜாலியான, இளைஞர்களை கவரக்கூடிய நகைச்சுவை கலந்த காதல் கதைகளை எடுப்பதில் வல்லவர்.

அப்படி அவர் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கதாநாயகியாக நடித்த ஹன்சிகா மீண்டும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.. ஆனால் இது வெப் சீரிஸ் ஒன்றுக்காக.

மை 3 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள வெப் சீரிசை சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் சீசன் ௧ நிகழ்ச்சி நடைபெற்று வரும் வீட்டிற்கு சென்று அறிமுகப்படுத்தினார் ஹன்சிகா.

இந்த வெப்சீரிஸில் ஹன்சிகாவுடன் ஜனனி அய்யர் மற்றும் ஆஷ்னா சாவேரி என்கிற இன்னும் இரண்டு கதாநாயகிகள் இணைந்து நடிக்கின்றனர் கதாநாயகர்களாக சாந்தனு, பிக்பாஸ் முகேன் ராவ் ஆகியோர் நடிக்கின்றனர்.

பொதுவாகவே வெப்சீரிஸ் என்றால் கிரைம் திரில்லர், ஹாரர் திரில்லர் என்பது போன்று தான் வெளியாகி வருகின்றன.

அந்த வழக்கத்தை உடைக்கும் விதமாக ராஜேஷ் தனது பாணியிலேயே இந்த நற்செய்தி ரொமான்ஸ் காமெடி ஜானரில் இயக்கி உள்ளார். விரைவில் ஹாட்ஸ்டாரில் இது ஒளிபரப்பாக இருக்கிறது.