Home News Kollywood பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 டைட்டில் வென்ற பாலா ; வாழ்த்திய ஆரி

பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 டைட்டில் வென்ற பாலா ; வாழ்த்திய ஆரி

பிக்பாஸ் சீசன் 5 கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த நிலையில், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் விதமாக பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 என்கிற 10 வாரங்கள் கொண்ட புதிய நிகழ்ச்சி உடனே துவங்கியது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன்களில் பங்குகொண்ட போட்டியாளர்களே இந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் சில வாரங்கள் கமல் தொகுத்து வழங்கிவிட்டு வேலை காரணமாக ஒதுங்கிக்கொள்ள அவருக்கு பதிலாக உள்ளே நுழைந்த சிம்பு இந்த நிகழ்ச்சியை இன்னும் சுவாரசியமாக தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.

கடந்த பிக்பாஸ் சீசனில் கீரியும் பாம்புமாக எலியும் பூனையுமாக ஆரியும் பாலாவும் மோதிக்கொண்ட காட்சிகள் ஒவ்வொரு நாளையும் பரபரப்பாக்கின.

இருந்தாலும் அந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் ஆக மாற, இரண்டாவது இடத்தைப் பிடித்தார் பாலா.

அப்படிப்பட்ட பாலா தற்போது இந்த பிக்பாஸ் அல்டிமேட் சீசனில் ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களின் மனதை கவர ஆரம்பித்தார். அதுமட்டுமல்ல முதல் பாகத்தில் இருந்த அவரது மைனஸ் பாயிண்டுகள் எல்லாவற்றையும் இந்த பாகத்தில் பிளஸ்சாக மாற்றி பக்குவப்பட்ட மனிதராக காட்சியளித்தார் பாலா.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் இந்த சீசன் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக பாலா வெற்றி பெற்றுள்ளார். நிருப் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

பாலா மீது எப்போதுமே அன்பு செலுத்தி வந்துள்ளார் ஆரி.. அந்த நிகழ்ச்சியில் கூட பலமுறை அதை வெளிப்படுத்தி உள்ளார்.

ஆனால் பாலா அதை ஆரம்பத்தில் புரிந்து கொள்ளாவிட்டாலும் கூட இறுதியில் ஆரியின் அன்பை புரிந்து கொண்டார்.

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் அல்டிமேட் சீசன்-1 இறுதிநாள் நிகழ்ச்சிக்கு ஆரியால் வரமுடியவில்லை என்றாலும் பாலா வெற்றி பெற்றது குறித்து, ‘வாழ்த்துக்கள் தம்பி பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 முதல் வெற்றியாளர் நீ”  எனது வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார் ஆரி.