நேர் கொண்ட பார்வை, வலிமை ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து அஜித், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மூவரும் அஜித்தின் 61வது படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.
ஒரே ஹீரோ ஒரு இயக்குனருடன் ஒரு தயாரிப்பாளருடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்றுவது என்பது சினிமாவில் எப்போதாவது நிகழும் ஒரு அதிசயம். அந்த அதிசயத்தை இந்த கூட்டணி மூன்றாம் முறையாக நிகழ்த்துவதற்கு தயாராகியுள்ளது.
அஜித் நடிக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.
இதற்காக நேற்று முன்தினம் அஜித்குமார் ஹைதராபாத் சென்றுள்ளார். இந்த படம் துவங்கியதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விதமாக தயாரிப்பாளர் போனி கபூர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.