நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வர தயாராக இருக்கிறது. ஏற்கனவே இந்தப்படத்தில் இரண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை படிப்படியாக அதிகரிக்க செய்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் பீஸ்ட் மோடு என்கிற மூன்றாவது பாடலும் தற்போது வெளியாகியுள்ளது

அனிருத்தின் இசையில் ஏற்கனவே வெளியான அரபிக்குத்து பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் தேசிய கீதமாக மாறிவிட்ட நிலையில் இரண்டாவதாக வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலும் இளைஞர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த இரண்டு பாடல்களுமே காதல் வடிவிலான பாடலாக வெளியான நிலையில் தற்போது வெளியாகியுள்ள பீஸ்ட் மோடு பாடல் நாயகனின் பராக்கிரமங்களை சொல்லும் விதமாக உருவாகியுள்ளது. இந்த பாடலை விவேகா எழுத, கோவிந்த் பிரசாத் பாடியுள்ளார்..

குறிப்பாக தீப்பிடிக்கும் ஒருத்தன் வந்தா படை நடுங்கும்.. அவன் மேல் இடிக்கும் கூட்டமெல்லாம் தோல்வி மட்டும் பழகிடணும் என்பது போன்ற வரிகள் நிச்சயம் படத்தில் இடம்பெறும் விஜய்யின் கதாபாத்திரத்திற்காக மட்டுமே எழுதப்பட்டது என நம்புவோம்.

படத்தின் மிக முக்கியமான தருணத்தில் இந்த பாடல் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக கிட்டத்தட்ட கில்லி படத்தில் இடம்பெற்ற அர்ஜுனரு வில்லு.. அரிச்சந்திரன் சொல்லு என்கிற பாடல் எப்படி அந்த சூழ்நிலைக்கு பொருத்தமாக அமைந்ததோ அதேபோன்று இந்த பாடலும் படத்தின் பரபரப்பான காட்சிகள் இடம் பெறும் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.