V4UMEDIA
HomeNewsKollywoodஉதயநிதியின் கைகளில் அடைக்கலம் புகுந்த டான்

உதயநிதியின் கைகளில் அடைக்கலம் புகுந்த டான்

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் டான். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார் பிரியங்கா அருள் மோகன். மற்றும் சூரி எஸ் ஜே சூர்யா சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

வரும் மே-13ம் தேதி இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தமிழில் உருவாகியுள்ள மிகப்பெரிய படங்களான பீஸ்ட், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், என ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் வெளியீடாக பல படங்கள் ரிலீசுக்கு தயாராக காத்திருக்க அந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது சிவகார்த்திகேயனின் டான்.

Most Popular

Recent Comments