Home News Kollywood ஆக-12ல் வெளியாகும் சமந்தாவின் யசோதா

ஆக-12ல் வெளியாகும் சமந்தாவின் யசோதா

நயன்தாராவை போல நடிகை சமந்தாவும் தற்போது கதையின் நாயகியாக தன்னை தேடி வரும் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் உருவாகி தமிழிலும் வெளியாக உள்ள யசோதா என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தை இரட்டை இயக்குனர்களான ஹரி மற்றும் ஹரிஷ் என இருவர் இயக்கியுள்ளனர்.

இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார் படத்தின் கதாநாயகனாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சுதந்திர தினத்தை ஒட்டி மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் அதை கணக்கில் கொண்டு ஒரு பிரபல ஹீரோவின் படம் வெளியாவது போல சமந்தாவின் படம் ரிலீசாக இருக்கிறது.