ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் தான் தற்போது பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் தமன். நடிகராக அறிமுகமானாலும் தனக்கு இசை தான் செட் ஆகும் என தன்னுடைய பாதையை தேர்ந்தெடுத்து அதிலும் தெலுங்கு திரையுலகில் சென்று கொடி நாட்டி இன்று முன்னணி நடிகர்கள் அனைவரும் படத்திற்கும் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் தமன்.
இருந்தாலும் தமிழில் தான் ரசித்துப் பார்க்கும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கவில்லையே என்கிற மனக்குறை அவருக்குள் இருந்தது. இந்த நிலையில்தான் தளபதி விஜய் முதன்முதலாக தெலுங்கில் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார் தமன் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது.
இதற்கு தமன் இசையமைக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாவதற்கு முன்பே ஒரு முறை தளபதி விஜய்யை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார் தமன். அப்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் இருவரும் இசை பாடல்களை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த ஒரு மணி நேர பேச்சின்போது தனக்கு மூன்று முறை கிரீன் டீ குடித்து விஜய் உபசரித்தார் என்றும் அந்த அளவுக்கு தங்களுடைய பேச்சு சுவாரசியமாக நீண்டு கொண்டே சென்றது என்றும் கூறியுள்ளார் தமன் குறிப்பாக தான் இசையமைத்த தெலுங்கு படத்தின் பாடல்கள் அனைத்தையும் பற்றி விலாவாரியாக விஜய் பேச, ஆச்சரியப்பட்டுப் போனாராம் தமன். நிச்சயமாக நாம் இருவரும் ஒரு படத்தில் இணைவோம் என்று அப்போதே தளபதி விஜய் சொன்னதை இப்போது நிறைவேற்றி காட்டியுள்ளார் என சிலாகிக்கிறார் தமன்.