காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சுனைனா. கடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் தாக்குப் பிடித்து நிற்கும் வெகுசில கதாநாயகிகளில் இவரும் ஒருவர்.
தற்போது கதைக்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சுனைனா அந்தவகையில் நடித்துள்ள படம்தான் ரெஜினா.
தனது கணவனை கொலை செய்து அவர்களை தேடி கண்டுபிடிக்க புறப்படும் ஒரு துணிச்சல் மிகுந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுனைனா. ஒரு உளவியல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை டோமின் டி சில்வா என்பவர் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது.
ஒரு சாதாரண குடும்பத்து பெண்ணான சுனைனா தனக்கும் தனது கணவருக்கும் எதிரிகளே இல்லாத நிலையில் யார் தனது கணவரை கொன்று இருப்பார்கள் என்கிற கேள்விக்கு விடையை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை என்கிறார் தயாரிப்பாளர் சதீஷ் நாயர்.