V4UMEDIA
HomeNewsKollywoodஅங்காடித்தெரு மகேஷ் ஜோடியாக 5 ஹீரோயின்கள்

அங்காடித்தெரு மகேஷ் ஜோடியாக 5 ஹீரோயின்கள்

வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித்தெரு என்கிற படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் மகேஷ். அதை தொடர்ந்து அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் இன்னும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வெற்றி படம் அமையவில்லை.

இந்த நிலையில் ஏவாள் என்கிற படத்தில் நடிக்கிறார் மகேஷ். இந்தப்படத்தை ஜித்தேஷ் கருணாகரன் என்பவர் இயக்குகிறார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தில் அங்காடித்தெரு மகேஷ் ஜோடியாக 5 கதாநாயகிகள் நடிக்கின்றனர். அந்த ஐந்து பேரை பற்றிய விபரங்கள் இதோ..

பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார்.  இவர் அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர் பெங்காலியில் சில படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்தவர்.தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம்.

இன்னொரு நாயகியாக கௌரி சர்மா நடித்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் சில படங்களில் தோன்றியவர். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்திய முன்னணி மாடலான மதுமிதாவும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் பிருத்விராஜ் படம் உள்ளிட்ட  சில படங்களில் நடித்துள்ள அக்ஷரா ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரபல மாடல் பர்சிதா சின்காவும் இருக்கிறார். இவர் இப்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

இன்னொரு மாடல் ஆரத்தி கிருஷ்ணாவும் நடித்துள்ளார். இவர்  மலையாளத்தில் 3, தமிழில் 2 என்று படங்களில் நடித்துள்ளவர்.இவர் இப்படத்தின் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளார்.

இப்படி 5 கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல.. நீளமான தாடி வைத்துள்ளவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும் இந்திய அளவில் முதலிடமும் பெற்ற ப்ரவீன் பரமேஸ்வரர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார்.

Most Popular

Recent Comments