ஆர்யா காட்டில் தான் நல்ல மழை என்பதுபோல கடந்த இரண்டு வருடங்களில் அவர் நடித்த டெடி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை-3 ஆகிய படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்து விட்டன. இதை தொடர்ந்து தற்போது அவர் நடித்து வரும் கேப்டன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக டெடி படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ஆர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனமும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் படத்தில் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி நடிக்க, முக்கிய வேடங்களில் சிம்ரன், ஹரிஷ் உத்தமன், காவியா ஷெட்டி, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது

இதில் என்ன ஆச்சரியம் என்ன என்றால் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை உருவாக்க படக்குழுவினர் ஒன்றரை ஆண்டுகள் உழைத்துள்ளனராம். இந்த படம் பரபரக்கும் ஒரு திரில் சவாரியாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.