வெப் சீரிஸ் என்றாலே கிரைம் திரில்லர் அல்லது நிஜமாக நடைபெற்ற கொலை, கொலை சம்பவங்கள் ஆகியவற்றை பின்னணியாக கொண்டு உருவாக்கப்படுவது தான் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வெப்சீரிஸில் ஒரு புது முயற்சியாக குடும்ப சப்ஜெக்டை கையில் எடுத்து ஆனந்தம் என்கிற வெப்சீரிஸை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரியா. இவர் மணிரத்னத்திடம் உதவியாளராக பயிற்சி பெற்றவர்.
இந்த வெப்சீரிஸில் பிரகாஷ்ராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் இந்த வெப்சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
எட்டு எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸில் பிரகாஷ்ராஜ் தவிர ஜான் விஜய், சம்பத், விவேக் பிரசன்னா, மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
குடும்ப சப்ஜெக்ட் என்றாலும் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக தன்னிடம் வசித்த ஒரு குடும்பத்தினர் பற்றிய சுக துக்கங்கள், கோபங்கள், சந்தோசங்கள் ஆகியவற்றை ஒரு வீடு பகிர்ந்து கொள்வது போல இந்த வெப்சீரிஸின் கதை உருவாகியுள்ளது.