விக்ரம் பிரபு நடிப்பில் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள படம் டாணாக்காரன். போலீஸ் தேர்வுக்கு தயாராகும் ஒரு இளைஞன் அதில் தேர்வான பின் போலீஸ் என்கிற பொறுப்பை அடைவதற்குள் கொடுக்கப்படும் பயிற்சியில் என்னென்ன விதமான சிக்கல்களை சந்திக்கிறான், உயரதிகாரிகளின் அழுத்தம் எந்த அளவுக்கு அவர்களை பயிற்சியில் புரட்டிப் போடுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.
அதுமட்டுமல்ல சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் கொடூரமான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த தமிழ் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் என்பது ஹைலைட்டான விஷயம்.
இந்த படத்தில் மூன்று முக்கிய போலீஸ் அதிகாரிகளாக நடிகர் லால், மதுசூதன ராவ் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
நிச்சயமாக இவர்கள் மூவரும் இந்த படத்தின் தூண்களாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த படம் பற்றி சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்ஆர் பிரபு கூறும்போது “டாணாக்காரன் படத்தில் லீட் கேரக்டர் ரொம்ப முக்கியமாக இருக்கும். அதே நேரத்தில் லீட் கேரக்டருக்கு இணையாக 150 பேர் நடிச்சிகிட்டே இருக்கணும். அது ரொம்ப சேலஞ் ஆக இருந்துச்சு..” என்று கூறியுள்ளார்.
அவர் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது படத்தில் நடித்துள்ள பலருக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது.
நிச்சயமாக அவர்களது முந்தைய தயாரிப்புகளான மாயா, மாநகரம், மான்ஸ்டார் படங்களை போல டாணாக்காரனும் ஒரு அதிரடி வெற்றி படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.