நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் எட்டு நாட்களே உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. முதன்முறையாக இந்த படம் விஜய் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பீஸ்ட் என்கிற பெயரிலும் இந்தியில் மட்டும் ரா என்கிற பெயரிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று இந்தப்படத்தின் அரபிக்குத்து லிரிக் வீடியோ தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியானது.
அதேபோல இந்த படத்தின் ட்ரெய்லரும் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. இந்தியில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை பாலிவுட் நடிகர் வருண் தவான் வெளியிட்டார்.