V4UMEDIA
HomeNewsKollywoodஅதிரடி கதைக்களத்துடன் தமிழில் வெளியாகும் ராம்கோபால் வர்மாவின் காதல் காதல் தான்

அதிரடி கதைக்களத்துடன் தமிழில் வெளியாகும் ராம்கோபால் வர்மாவின் காதல் காதல் தான்

அதிரடியான சர்ச்சையான கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்துவதில் வல்லவர் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா. அவரது பேச்சுக்களை போல அவரது படங்களும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தக்கூடிய விதமாக, அதேசமயம் ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் விதமாகவும் அமைந்திருக்கும்.

அந்த விதமாக தற்போது தமிழில் அவர் இயக்கியுள்ள காதல் காதல் தான் என்கிற படம் வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படம் இந்த லெஸ்பியன் எனப்படுகின்ற இரண்டு பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகிகளாக நைனா கங்குலி மற்றும் அக்ஷரா இருவரும் நடித்துள்ளனர்

சமீபத்தில் இந்த படத்திற்காக நடைபெற்ற புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ராம் கோபால் வர்மா, “ஓரினச்சேர்க்கையாளர்களை அரசாங்கமே அனுமதி அளித்தாலும் கூட பொதுமக்கள் பார்வை அவர்கள் மீது இன்னும் வேறுவிதமாகவே இருக்கிறது.

இரண்டு இளம்பெண்கள் ஏன் லெஸ்பியன் உறவுக்கு செல்கிறார்கள், அவர்களை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது, அவர்களின் பிரச்சனை என்ன என்பதை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி உள்ளேன்” என்று கூறினார்.

Most Popular

Recent Comments