நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக புட்டபொம்மா புகழ் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருப்பது படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த படத்தின் அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா என இரண்டு பாடல்கள் அனிருத்தின் இசையில் வெளியாகி யூடியூபில் பட்டையை கிளப்பி வருகின்றன.
இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை சோசியல் மீடியாவில் கேள்விகளாக தொடுத்து வந்தனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ‘நாளை’ என்கிற ஒரு வார்த்தையில் ஒரு பதிவிட்டிருந்தார்..
அவர் சொன்னபடியே இன்று பீஸ்ட் பட ட்ரெய்லர் வரும் ஏப்ரல்-2ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்கிற ரசிகர்களுக்கு சந்தோஷம் தரும் அறிவிப்பையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கூடவே ‘நம்ம ஆட்டம் இனிமே வேற மாதிரி இருக்கும்’ என்றும் அவர்கள் கூறியுள்ளது டீசரே அதிரடியாக இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளது.