வீரமே வாகை சூடும் படத்தை தொடர்ந்து விஷால் தற்போது லத்தி, துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதுதவிர மார்க் ஆண்டனி என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது.
இந்தநிலையில் அவர் இயக்குனர் முத்தையா டைரக்ஷனில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மருது என்கிற படத்தில் இந்த கூட்டணி இணைந்து ரசிகர்கள் வரவேற்கத்தக்க ஒரு படத்தை கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் மீண்டும் இணையும் இந்த புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் ஜீ ஸ்டுடியோவும் இணைந்து தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.